பிரசத்தி பெற்ற அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் XM மற்றும் XM(S) என இரண்டு வேரியண்டுகளை விற்பனைக்கு டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. XM(S) வேரியண்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் இந்த வேரியண்டுகள் கிடைக்கும்.
Tata Altroz
1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் சிஎன்ஜி எரிபொருள் மைலேஜ் 27Km/kg ஆகும்.
டர்போ அல்ட்ராஸ் காரில், .2 லிட்டர் டர்போ பெட்ரோல் 3 சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்.பி.எம்-மில் 90 BHP பவர் மற்றும் 1500-5000 ஆர்.பி.எம்-மில் 140 NM வெளிப்படுத்தும். இந்த ஐ-டர்போ பெட்ரோல் என்ஜில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
XM வேரியண்டில் ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்ட சுவிட்சுகள், ஓட்டுநர் இருக்கை உயரம் சரிசெய்தல், மின்சாரத்தில் மடிக்கக்கூடிய ORVM, R16 முழு வீல் கவர் மற்றும் பிரீமியம் தோற்றமுடைய டாஷ்போர்டு ஆகியவை அடங்கும்.
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக வாடிக்கையாளர்கள் பெரிய 9-இன்ச் டச்ஸ்கிரீனையும் தேர்வு செய்யலாம், இது எக்ஸ்எம் டிரிம்மிற்கு விருப்பமான ஆக்செரிஸ் ஆகும்.
மேலும், இந்தியாவின் மிக ரூ.7.35 லட்சம் குறைந்த விலையில் சன்ரூஃப் பெற்ற மாடலாக அல்ட்ராஸ் XM (S) வேரியண்ட் விளங்குகின்றது.
மேலும் அனைத்து அல்ட்ராஸ் வேரியண்டுகளிலும், இப்பொழுது நான்கு பவர் விண்டோஸ் மற்றும் ரிமோட் கீலெஸ் என்ட்ரியுடன் வருகின்றது.
Altroz XM – INR 6.90 லட்சம்
Altroz XM(S) INR 7.35 லட்சம்