Categories: Car News

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிம்னி எஸ்யூவிக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு.!

suzuki jimny nomade suv

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் 5 டோர் ஜிம்னி எஸ்யூவி (Jimny Nomade) காருக்கு சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு உள்ள நிலையில் ஜப்பானில் சமீபத்தில் அறிமுகம் செய்ய உள்ளதை தொடர்ந்து முன்பதிவு துவங்கப்பட்ட சில நாட்களிலேயே 50 ஆயிரத்திற்கும் கூடுதலான முன்பதிவு நடைபெற்றுள்ளதால் தற்பொழுது இந்த காருக்கான முன்பதிவு ஜப்பானின் நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

ஜிம்னியின் ஐந்து கதவுகளை கொண்ட வேரியண்ட் ஹரியானாவில் உள்ள மாருதி சுசூகியின் ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகின்ற நிலையில், இந்த மாடல் உலகளாவிய ஆஃப் ரோடு  சாலைக்கு ஏற்ற தனித்துவமான சிறப்புகளை பெற்றுள்ளதால் கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பானில் 5-கதவுகள் கொண்ட ஜிம்னியை அறிமுகப்படுத்துவது மாருதி சுசுகியின் ஏற்றுமதி சந்தைக்கான மிக முக்கியமான ஒன்றாகும். ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் மாடலுக்குப் பிறகு இரண்டாவது மாடலாக ஜிம்னி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலுக்கு ஜப்பானிய சந்தையின் மாடலுக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஜிம்னி நோமேடின் லெவல்-2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுகின்றது.

இப்போது, ​​இந்த மாடல் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு ஜிம்னி இரண்டாவது அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் மாடலாக விளங்குகின்றது.

Share
Published by
Automobile Tamilan Team