CES 2020 லாஸ் வேகஸ் நகரில் நடந்து வரும் நிலையில் பிரசத்தி பெற்ற எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான சோனி நிறுவனம், தனது முதல் ஆட்டோமொபைல் கான்செப்ட்டை சோனி விஷன் எஸ் என்ற பெயரில் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளிப்படுத்தியுள்ளது.
பல்வேறு நகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ள சோனி நிறுவனம், கூடுதலாக வெளியிட்டுள்ள விஷன் எஸ் காரின் நுட்ப விபரங்கள் மற்றும் உற்பத்திக்கு செல்ல உள்ள விபரங்களை குறிப்பிடவில்லை.
விஷன் எஸ் கான்செப்ட் காரில் சோனியின் இமேஜிங் மற்றும் சென்சிங் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உடன் கூடிய தொலைத்தொடர்பு மற்றும் கிளவுட் தொழில்நுட்பம் கொண்டதாக விளங்கும் வகையில் காட்சிக்கு வந்தள்ளது. சோனி விஷன் எஸ் கான்செப்ட் காரில் மொத்தம் 33 சென்சார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் (CMOS) சிஎம்ஓஎஸ் பட சென்சார்கள் மற்றும் டிஓஎஃப் (ToF) சென்சார்கள் உள்ளன. இதன் மூலம் காரிலும், சுற்றியுள்ள மக்களையும் பொருட்களையும் அடையாளம் கண்டு அதற்கேற்ப இயங்கும் வகையில் ஆட்டோமேட்டிக் நுட்பத்தை கொண்டதாக உள்ளது
இந்த காரில் சோனியின் 360 ரியாலிட்டி ஆடியோ சிஸ்டத்தையும் பெறுகிறது. இது ஒவ்வொரு இருக்கையிலும் ஸ்பீக்கர்கள் மூலம் பயனருக்கு ஏற்ற வகையில் கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது. இந்த காருக்கான பிளாட்ஃபாரத்தை மேக்னா வடிவமைத்துள்ளது.