கிரெட்டா,செல்டோஸ், கிக்ஸ் உட்பட பல்வேறு சி-பிரிவு எஸ்யூவிகளுக்கு சவாலாக விளங்க உள்ள ஸ்கோடா VISION IN கான்செப்ட் மாடலின் உற்பத்தி நிலை காரின் பெயர் ஜனவரி 2021-ல் அறிவிக்கப்பட உள்ளது.
இந்திய சந்தையில் மிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வரும் சி-பிரிவு எஸ்யூவி கார்களில் தென்கொரியாவின் இரு நிறுவனங்களும் 50 % கூடுதலான சந்தையை ஒட்டுமொத்த எஸ்யூவி பிரிவில் கைப்பற்றியுள்ளன. மிக கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ள விஷன் இன் இந்திய சந்தையில் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு மிகவும் சவாலான விலையில் வெளியாக உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்திய சந்தைக்கான MQB A0 IN மாடூலர் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி காரின் விற்பனைக்கு வெளியிடப்படக்கூடிய பெரை ஜனவரி 2021-ல் வெளியிட உள்ள நிலையில், விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும்.
விஷன் இன் இன்ஜின் ஆப்ஷன்
விஷன் இன் எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (115PS/200Nm) மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் (150PS/250Nm) ஆகியவை இடம்பெறலாம். டீசல் என்ஜின் இடம்பெறுவதற்கு மாற்றாக சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷனை பெறக்கூடும் என எதிர்பார்கப்படுகின்றது. 1.5 லிட்டர் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ மாடல் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெறலாம்.
ஃபீரி ஸ்டேண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்டரல் கன்சோலில் கொடுக்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்ற காராக விளங்கலாம்.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உட்பட ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள ஸ்கோடா எஸ்யூவி விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சத்திற்குள் அமையலாம்.