மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரில் விலை ரூ.54 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CBU முறையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த கார் 100 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்.
சூப்பர்ப் காரில் 2.0 லிட்டர் பொருத்தப்பட்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 188 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கின்றது.
Skoda Superb
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ஒற்றை Laurin & Klement வேரியண்டில் 9 ஏர்பேக்குகள், அவரசகால பிரேக்கிங் அமைப்பு, டைனமிக் சேஸ் கண்ட்ரோல், ஏக்டிவ் டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக் உட்பட மற்ற வசதிகளாக அடாப்ட்டிவ் ஆட்டோ எல்இடி ஹெட்லைட், எல்இடி பனி விளக்குகள் மற்றும் எல்இடி டையில் லைட் பெற்றுள்ளது.
ரோஸ்ஸோ புருனெல்லோ மற்றும் வாட்டர் வேர்ல்ட் கிரீன், முன்பு வழங்கப்பட்ட மேஜிக் பிளாக் நிறத்தை பெற்றுள்ள டேஸ்போர்டில் காக்னாக் பிரவுன் லெதர் அப்ஹோல்ஸ்டரி உள்ளது.
மற்ற வசதிகளில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் கனெக்ட்டிவ் அம்சங்களை பெற 8-இன்ச் கொலம்பஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.
ஸ்கோடாவின் சூப்பர்ப் மாடலில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், பார்க் அசிஸ்ட் கொண்ட 360 டிகிரி கேமரா, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள் மற்றும் 3-சோன் க்ளைமேட்ரானிக் ஏசி போன்ற அம்சங்கள் உள்ளன.
வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா N-line காரின் படங்கள் வெளியானது