ஸ்கோடா இந்தியாவின் கைலாக் எஸ்யூவி ரூபாய் 7,89,000 முதல் ரூபாய் 14,40,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் முன்பதிவு ஆனது தொடங்கப்படுகின்ற நிலையில் டெலிவரி ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ளது.
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்தியாவின் மிக கடுமையான போட்டிகள் நிறைந்த காம்பேக்ட் சந்தையில் நுழைந்துள்ள ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் நிறுவனத்தின் கைலாக் மாடல் ஆனது இந்திய சந்தையிலே MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு மிகச் சிறப்பான வகையில் பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு இடையே கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கைலாக் காரில் 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு 5,000-5,500rpm-ல் 115 PS மற்றும் 1,750-5,000rpm-ல் 178 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது
446 லிட்டர் பூட்ஸ்பேஸ் பெற்றுள்ள காரின் அனைத்து வேரியண்டிலும் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், இழுவைக் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை மவுண்டிங் பாயிண்ட்கள், ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் மூன்று பாயின்ட் சீட்பெல்ட்கள் அனைத்து பயணிகளுக்கும் கிடைக்கும்.
- 1.0 TSI MT Kylaq Classic – ₹ 7,89,000
- 1.0 TSI MT Kylaq Signature – ₹ 9,59,000
- 1.0 TSI MT Kylaq Signature Plus – ₹ 11,40,000
- 1.0 TSI MT Kylaq Prestige – ₹ 13,35,000
- 1.0 TSI AT Kylaq Signature – ₹ 10,59,000
- 1.0 TSI AT Kylaq Signature Plus – ₹ 12,40,000
- 1.0 TSI AT Kylaq Prestige – ₹ 14,40,000
(Ex-showroom)
கைலாக் மாடலுக்கு போட்டியாக டாடா நெக்ஸன், மஹிந்திரா xuv 3xo, கியா சோனெட், ஹூண்டாய் வெனியூ மற்றும் மாருதி சுசூகி ப்ரெஸ்ஸா போன்றவற்றுடன் டொயோட்டா டைசோர், மாருதி ஃபிரான்க்ஸ் போன்றவையும் உள்ளது.