ஸ்கோடா இந்தியா வடிவமைத்து வெளியிட்டுள்ள புதிய Kylaq காம்பேக்ட் எஸ்யூவி மாடல் டெலிவரி ஜனவரி 2025 முதல் கிடைக்க உள்ள நிலையில் இன்றைக்கு முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குஷாக் உள்ளிட்ட மற்ற ஸ்கோடாவின் எஸ்யூவி கார்களில் இருந்து பெறப்பட்ட ஸ்டைலிஷான பிரீமியம் டிசைனை பெற்றதாக 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ளது.
4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள பல்வேறு போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற கைலாக் காரில் 5,000-5,500rpm-ல் 115 PS மற்றும் 1,750-5,000rpm-ல் 178 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.
ஸ்கோடாவின் கைலாக் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
3,995மிமீ நீளம், 1,975 மிமீ அகலம் மற்றும் 1,575 மிமீ உயரம் கொண்டுள்ள நிலையில் 2,566மிமீ வீல்பேஸ், மற்றும் 189மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 446 லிட்டர் பூட்ஸ்பேஸ் பெற்றுள்ள காரில் 17 அங்குல டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ளது.
குஷாக் காரிலிருந்து பெறப்பட்டுள்ள இன்டீரியரில் 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 8 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.
கைலாக்கின் அனைத்து வேரியண்டிலும் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், இழுவைக் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை மவுண்டிங் பாயிண்ட்கள், ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் மூன்று பாயின்ட் சீட்பெல்ட்கள் அனைத்து பயணிகளுக்கும் கிடைக்கும்.
கைலாக் முக்கிய தேதிகள்
வரும் டிசம்பர் 2,2024 முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி பாரத் மொபைலிட்டி ஷோவில் காட்சிக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து டெலிவரி ஜனவரி 27 முதல் வழங்கப்பட உள்ளது.