4 மீட்டருக்கும் குறைந்த நீளமுள்ள ஸ்கோடாவின் கைலாக் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆன்-ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
கைலாக் காரில் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரஸ்டீஜ் என என நான்கு விதமான வேரியண்டுகளை பெற்று 115bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.
Skoda Kylaq on-road price in Tamil Nadu
தமிழ்நாட்டில் ஸ்கோடா கைலாக் எஸ்யூவி மாடலின் ஆன் ரோடு விலை ரூ. 9.43 லட்சம் முதல் ரூ. 17.91 லட்சம் வரை அமைந்துள்ளது.
எக்ஸ்ஷோரூம் | ஆன்ரோடு | |
Kylaq Classic MT | ₹ 7,89,000 | ₹ 9,43,561 |
Kylaq Signature MT | ₹ 9,59,000 | ₹ 11,45,956 |
Kylaq Signature+ MT | ₹ 11,40,000 | ₹ 14,27,061 |
Kylaq Prestige MT | ₹ 13,35,000 | ₹ 16,68,856 |
Kylaq Signature AT | ₹ 10,59,000 | ₹ 12,68,161 |
Kylaq Signature+ AT | ₹ 12,40,000 | ₹ 15,43,056 |
Kylaq Prestige AT | ₹ 13,40,000 | ₹ 17,90,456 |
(on-road Price Tamil Nadu)
கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடின் விலையில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை.
பொதுவாக அனைத்து வேரிண்டிலும் பாதுகாப்பு சார்ந்த 6 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், இழுவைக் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை, மூன்று பாயின்ட் சீட்பெல்ட்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியவை உள்ளது.
Skoda Kylaq Classic
ஆரம்ப நிலை ரூ.7.89 லட்சத்தில் துவங்கும் கைலாக் கிளாசிக் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்று,
- 16 அங்குல ஸ்டீல் வீல்
- பாடி நிறத்தில் ORVMS (மின்சாரம் சரிசெய்யக்கூடியது)
- எல்இடி ரன்னிங் மற்றும் எல்இடி ஹெட்லைட்
- எல்இடி டெயில்லைட்
- மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளேவுடன் அனலாக் கருவி கிளஸ்ட்டர்
- 2-ஸ்பீக்கர் (ட்வீட்டர்கள்)
- மேனுவல் ஏசி
- டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங்
- ஃபேபரிக் அப்ஹோல்ஸ்ட்ரி
Skoda Kylaq Signature
கைலாக் கிளாசிக் வசதியுடன் கூடுதலாக சிக்னேச்சர் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,
- 16 அங்குல அலாய் வீல்
- சேமிப்புடன் கூடிய முன்பக்க மைய ஆர்ம்ரெஸ்ட்
- 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்
- வயர்டூ ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
- 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்
- பின்புற ஏசி வெண்ட்
- ஆட்டோ அப்/டவுன் டிரைவர் சைடு விண்டோஸ்
- க்ரூஸ் கட்டுப்பாடு
- குளிரூட்டப்பட்ட க்ளோவ் பெட்டி
- 2 யூ.எஸ்.பி-சி பின்புற சாக்கெட்டுகள்
- பின்புற டிஃபோகர்
- பின்புற பார்சல் டிரே
- டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு (TPMS)
Skoda Kylaq Signature Plus
கைலாக் சிக்னேச்சர் வசதியுடன் கூடுதலாக சிக்னேச்சர் பிளஸ் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,
- ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்
- ஆட்டோ ORVMS
- சுறா ஃபின் ஆண்டெனா
- 8 அங்குல டிஜிட்டல் டிரைவரின் காட்சி
- 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்
- வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே
- 2 USB சி வடிவ முன் சாக்கெட்
- கனெக்டேட் கார் தொழில்நுட்பம்
- ஆட்டோ ஏசி
- காற்று சுத்திகரிப்பு
- கீலெஸ் என்ட்ரி
- கப் ஹோல்டருடன் பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட்
- 60:40 பின்புற இருக்கைகளை பிரிக்கவும்
- ஹில் ஹோல்ட் கட்டுப்பாடு
- ரிவர்ஸ் கேமரா
Skoda Kylaq Prestige
கைலாக் சிக்னேச்சர் பிளஸ் வசதியுடன் கூடுதலாக பிரெஸ்டீஜ் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,
- 17 அங்குல டூயல் டோன் அலாய் வீல்
- எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்
- எல்இடி ஃபோக்லேம்ப் உடன் கார்னரிங் விளக்கு
- எல்இடி டர்ன் மற்றும் எல்இடி ரிவர்ஸ் லேம்ப்
- மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்
- வயர்லெஸ் தொலைபேசி சார்ஜர்
- எலெக்ட்ரிக் சன்ரூஃப்
- ஆட்டோ டிம்மிங் IRVM
- லீதரெட் அப்ஹோல்ஸ்டரி
- பேடல் ஷிஃப்டர்கள் (தானியங்கி மட்டும்)
- 6-வழியில் சரிசெய்யக்கூடிய முன் இருக்கைகள்
- காற்றோட்டமான முன் இருக்கைகள்
- ஆம்பியன்ட் விளக்குகள்
- பின்புற வைப்பர் மற்றும் வாஷர்
- திருட்டு தடுக்கை அலாரம்
இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் டாடா நெக்ஸன், மஹிந்திரா xuv 3xo, கியா சோனெட், ஹூண்டாய் வெனியூ மற்றும் மாருதி சுசூகி ப்ரெஸ்ஸா போன்றவற்றுடன் டொயோட்டா டைசோர், மாருதி ஃபிரான்க்ஸ் உள்ளன.