ஸ்கோடா இந்தியா நிறுவனம் கரோக் எஸ்யூவி காரை இந்தியாவில் ரூபாய் 24.99 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மடாலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்ட உள்ளது.
முன்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட யெட்டி எஸ்யூவி-க்கு மாற்றாக வந்துள்ள புதிய ஸ்கோடா கரோக் மாடல் முன்பாக விற்பனையில் உள்ள கோடியாக் எஸ்யூவி மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டு அந்த காரின் வடிவ தாத்பரியங்களை பின்பற்றியதாக அமைந்துள்ளது. இந்த 5 இருக்கை கொண்ட பெட்ரோல் எஸ்யூவி ஒற்றை வேரியண்டில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட உள்ளது.
கரோக் காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் TSI என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
கரோக் காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 202 கிமீ ஆகவும், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 14.49 கிமீ என WLTP சான்றிதழ் வழங்கியுள்ளது.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களைப் பொறுத்தவரை 9 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, உட்பட இஎஸ்சி , ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.
5 இருக்கைகளை கொண்ட இந்த மாடலில் மிக நேர்த்தியான இன்டிரியர் வழங்கப்பட்டு 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்றவற்றை கொண்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எம்ஜி ஹெக்டர், ஃபோக்ஸ்வாகன் டி-ராக், டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ், செல்டோஸ் மற்றும் கிரெட்டா போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.