ஆடம்பரத்தின் உச்சகட்டம் என புகழப்படுகின்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் பிராண்டில் முதன்முறையாக எஸ்யூவி ரக மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) என்ற பெயரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் சொகுசு அம்சங்களை கொண்டதாக வெளியாகியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்
பிஎம்டபிள்யூ குழுமத்தின் தலைமையின் கீழ் செயல்படும், பிரிட்டீஷ் நாட்டின் உயர்த பிராண்டாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி அல்லது 4 வீல் டிரைவ் கொண்ட மாடலாக எவ்விதமான சாலையில் பயணிக்கும் நோக்கில் அட்வென்ச்சர் முதல் ஆன்ரோடு வரை ஆடம்பரத்தை எடுத்துச் செலும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லினன் பெயர் பின்னணி
கல்லினன் என்பது ஆப்பிரிக்க சுரங்கத்தில் கிடைக்கப் பெற்ற 3,106 காரட் வைரத்தின் பெயர் ஆகும். இந்த வைரத்தை 9 பாகங்களாகப் பிரித்து அதில் ஒன்று இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் வைத்துள்ளார்கள் அந்தளவு பெரும் மதிப்புடையது இந்த வைரத்தை பெயரை , உயர் தர மதிப்பு மற்றும் வசதிகளை பெற்றதாக இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபேன்டமின் பிளாட்பாரத்தை (Architecture of Luxury’ or aluminium spaceframe ) பின்னணியாக கொண்டு 5.3 மீட்டர் நீளம் (5341 மிமீ) கொண்டுள்ள இந்த எஸ்யூவி மாடல் high-bodied vehicle என அழைக்கப்படுகின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் 6.8 லிட்டர் V12 ட்வீன் டர்போ சார்ஜ்டு இன்ஜின் 571 bhp பவர் மற்றும் 850 Nm டார்க் தரும் விதமாக ரீடியூன் செய்யப்பட்டுள்ளது. எஸ்யூவி என்பதால் மொத்த டார்க்கையும் 1,600 ஆர்பிஎம் சுழற்சியில் தரும் விதமாக டியூன் செய்யப்பட்டுள்ளது.
கல்லினன் எஸ்யூவி அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கல்லினன் எஸ்யூவி ரகத்தை ஏர் சஸ்பென்ஷன் கொண்டு உயரத்தை மாற்றியமைத்து, ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடு சாலைகளுக்கு ஏற்ற வகையில் பொத்தான் வழியாக வாகனத்தின் உயரத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து ரோல் ராய்ஸ் கார்களுக்கு உரித்தான பாரம்பரிய முகப்பு அமைப்பினை பெற்று ஸ்டீல் க்ரில், புருவம் போன்ற எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், மேட்ரிக் எல்இடி ஹெட்லைட், பின் பக்கம் ரோல்ஸ் ராய்ஸ் லேகோவுடன் கூடிய ஆங்கில எழுத்து D வடிவ டெயில் விளக்கினை கொண்டுள்ளது. இந்தக் எஸ்யூவி ரக மாடலில் சூசைடு டோர்ஸ் எனப்படும் பின்னோக்கி திறக்கும் வகையிலான கதவுகள் உள்ளன.
பல்வேறு சொகுசு வசதிகளுக்கு பஞ்சமில்லாத ரோல்ஸ் ராய்ஸ் கார்க்களில் இந்த முறை உச்சகட்ட அம்சமாக வியூவிங் சூட் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள இரு இருக்கைகளை பின்புறத்தில் உள்ள டெயில்கேட் கதவினை திறந்த பின்னர் அதில் சிறிய காக்டெயில் டேபிளுடன் கூடிய இரண்டு லெதர் சீட்டுகளைப் பொத்தானை அழுத்துவதன் மூலம் வெளிவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.
முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அனலாக் கடிகாரம், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை வழங்கப்பட்டு 5 இருக்கை வசதியுடன் 560 லிட்டர் பூட் வசதியுடன் கூடுதலாக 1930 லிட்டர் கொள்ளளவு வரை விரிவுப்படுத்த இயலும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விலை மற்றும் இந்தியா அறிமுகம் குற்றிது எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலும் வழங்கப்பட வில்லை.