விற்பனையில் கிடைக்கின்ற குறைந்த விலை 7 இருக்கைகள் பெற்ற ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரில் கூடுதல் பவரை வழங்கும் வகையில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை வழங்க உள்ளது. அடுத்தப்படியாக, ரெனால்ட் வெளியிட உள்ள 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற HBC காம்பாக்ட் எஸ்யூவி காரிலும் இடம்பெற உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ரெனால்ட் ட்ரைபரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கின்றது.
இந்நிலையில். 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் என்ஜினை பின்பற்றி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை ரெனால்ட்-நிசான் தயாரித்து வருகின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 95 ஹெச்பி – 100 ஹெச்பி பவரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த என்ஜினை ரெனால்ட் ட்ரைபர், வரவுள்ள ஹெச்பிசி எஸ்யூவி மற்றும் நிசான் இந்தியா மாடல்களும் பெற உள்ளது. மேலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலையும் வெளியிட உள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் குறித்தான விபரம் முழுமையாக வெளியாகலாம்.
உதவி – autocar india