இந்தியாவில் 3.50 லட்சத்துக்கு மேற்பட்ட ரெனால்ட் க்விட் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக 1.0 லிட்டர் அடிப்படையில் RXL மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடல் ரூ.4.16 லட்சத்தில் வெளியிடப்படுள்ளது. 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரு என்ஜின் தேர்வினை பெற்றதாக விற்பனை செய்யப்படுகின்றது.
விற்பனைக்கு வெளியிடப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் 3.50 லட்சம் விற்பனை எண்ணிக்கையை உள்நாட்டில் கடந்திருப்பதுடன், மேம்படுத்தப்பட்ட க்விட் வெளியிடப்பட்ட ஒரு ஆண்டுக்குள் 45,300 யூனிட்டுகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு மேம்பாட்டுக்கு பிறகு தற்போது க்விட் காரின் விலை ரூ.2,000 முதல் ரூ.7,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. RXT 1.0L MT, RXT 1.0L AMT, கிளைம்பர் பேஸ் வேரியண்ட் எம்டி மற்றும் ஏஎம்டி என மொத்தமாக நான்கு வேரியண்டுகள் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது விற்பனை செய்யப்படுகின்ற RXT(O) வேரியண்டை விட ரூ.37,000 வரை விலை குறைவாக வந்துள்ள இந்த வேரியண்ட் 0.8 லிட்டர் RXL வேரியண்ட் போல அல்லாமல் சற்று கூடுதலான வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. இந்த மாடலில் தொடுதிரை அமைப்பினை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகள் உள்ளன.
54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.