ஸ்டைலிஷான குறைந்த விலை மாடலான ரெனால்ட் க்விட் காரில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடல் ரூபாய் 3.02 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 5.11 லட்சம் வரை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட விலை ரூபாய் 9,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறையுடன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த என்ஜின் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.
பிஎஸ்6 என்ஜினை தவிர மற்றபடி எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இங்கே வழங்கப்பட்டுள்ள தமிழக எக்ஸ்ஷோரூம் விலை ஆகும்
Renault Kwid Price in Tamil Nadu
KWID STD 0.8 | ₹302290 |
KWID RXE 0.8 | ₹372290 |
KWID RXL 0.8 | ₹402290 |
KWID RXT 0.8 | ₹432290 |
KWID RXT 1.0L | ₹452290 |
KWID RXT 1.0L (O) | ₹459990 |
KWID RXT 1.0L EASY-R | ₹482290 |
KWID RXT(O) 1.0L EASY-R | ₹489990 |
KWID CLIMBER | ₹473490 |
KWID CLIMBER (O) | ₹481190 |
KWID CLIMBER EASY-R | ₹503490 |
KWID CLIMBER(O) EASY-R | ₹511190 |