ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் 4 மீட்டருக்கு நீளம் குறைந்த காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் முதல் மாடலான KIGER எஸ்யூவி காரின் விலை பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. கிகர் காரின் உற்பத்தி சென்னையில் அமைந்துள்ள ஆலையில் துவங்கப்பட்டுள்ளது.
நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் CMFA+ பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு எல்இடி ரின்னிங் விளக்குகள் மற்றும் மூன்று பிரிவுகளாக எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் அமைந்துள்ளது. மிதக்கும் வகையிலான மேற்கூறையை வெளிப்படுத்துகின்ற வகையில் சி பில்லரில் கருமை நிறம், ரூஃப் ரெயில் 16 அங்குல டூயல் டோன் அலாய் வீல், மிக நேர்த்தியான எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.
கிகர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜினில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோடு இடம்பெற்றிருக்கும்.
அடுத்து, 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.