2025 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் வரவுள்ள 7 இருக்கை பெற்ற புதிய ரெனால்ட் பிக்ஸ்டெர் மாடல் சர்வதேச அளவில் சில நாடுகளில் டேசியா பிக்ஸ்டெர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டஸ்ட்டரின் அதே CMF-B பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தோற்றத்தில் மற்றும் இன்டீரியரில் உள்ள வசதிகள் என பெரும்பாலான பாகங்கள் டஸ்ட்டரில் இருந்தே பிக்ஸ்டெர் மாடல் பகிர்ந்து கொள்ளுகின்றது.
அடிப்படையான முன்புற கிரில் அமைப்பு மற்றும் பம்பரில் வித்தியாசத்தை வழங்கும் வகையில் சிறிய மாற்றங்கள் பெற்றாலும், 227 mm கூடுதலாக நீளம் பெற்றுள்ள பிக்ஸ்டெர் காரில் உள்ள ஹெட்லைட் மற்றும் Y வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் 17 அல்லது 18 அங்குல அலாய் வீல் கொண்டுள்ள நிலையில் கூடுதலாக 19 அங்குல அலாய் வீல் ஆப்ஷனும் உள்ளது.
இன்டீரியரில் பெரும்பாலும் டஸ்ட்டர் காரில் இருந்து பெறப்பட்டு மிதக்கும் வகையிலான 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் பெற்றுள்ளது. கூடுதலாக டிஜிட்டல் கிளஸ்டர் உள்ளது.
120hp, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 140hp, 1.2-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் 170hp, 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆதரவான என்ஜினாக உள்ளது. ஒரு சில நாடுகளை பொறுத்து என்ஜின் தேர்வு மாறுபடும் இந்திய சந்தைக்கான என்ஜின் பற்றி உறுதியாக தகவல் தற்பொழுது இல்லை.
இந்தியாவில் புதிய டஸ்ட்டர் மற்றும் பிக்ஸ்டெர் என இரண்டும் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், நிசான் நிறுவனமும் இந்த இரு மாடல்களையும் கொண்டு வரவுள்ளது.