இந்தியாவில் போர்ஷே நிறுவனம், கேயேன் கூபே மற்றும் கேயேன் டர்போ கூபே என இரண்டு புதிய கேயேன் வேரியண்டுகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்திய சந்தைக்கு முழுமையாக வடிவமைக்கப்பட காராக இறக்குமதி செயப்படுகின்றது.
போர்ஷே கேயேன் கூபே மாடலில் 3.0 லிட்டர் வி 6 டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 340 பிஎஸ் அதிகபட்ச சக்தியையும், 450 என்எம் உச்ச டார்க்கையும் வழங்குகின்றது. மேலும், 6 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ளது.
கேயேன் டர்போ கூபே எஸ்யூவி காரில் 4 லிட்டர் வி8 எஞ்சின் கொண்டுள்ளது, இது இரட்டை டர்போ சார்ஜிங் பெற்று அதிகபட்சமாக 550 பிஎஸ் சக்தியையும், 770 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் அடையலாம் என்று போர்ஷே குறிப்பிடுகிறது. அதிவேக வேகம் மணிக்கு 286 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அனைத்து கேயேன் கூபே மாடல்களும் போர்ஷேவின் 8-வேக டிப்டிரானிக் எஸ் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளன.
இந்த கூபே ரக எஸ்யூவிக்கு போர்ஷே ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் (Porsche Active Aerodynamics -PAA) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பாய்லர் 90 கிமீ மணிக்கு வேகத்தில் கடக்கும்போது 135 மிமீ நீட்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக பின்புற ஆக்சிலில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.
போர்ஷே கேயேன் கூபே விலை ரூ. 1.31 கோடி
போர்ஷே கேயேன் டர்போ கூபே விலை ரூ. 1.97 கோடி
(எக்ஸ்ஷோரூம் இந்தியா)