இந்தியாவில் பியாஜியோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மூன்று சக்கர ஆட்டோ மாடலாக அபே இ-சிட்டி விற்பனைக்கு ரூ.1.97 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்மாக 70-80 கிமி ரேஞ்சு வழங்கவல்லதாக விளங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அபே எலக்டிரிக் வரிசையில் பயணிகள் மற்றும் சரக்கு என இரு பிரிவுகளில் ஆட்டோ வெளியிடப்பட உள்ளது. முதலில் வந்துள்ள அபே இ-சிட்டி ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை இலகுவாக ஸ்வாப் செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக 10 நகரங்களில் மார்ச் 2020 க்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த மாடலுக்கு பேட்டரி ஸ்வாப் செய்ய சன் மொபைலிட்டி நிறுவனத்துடன் இணைந்து பியாஜியோ செயல்பட உள்ளது.
4.27 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 70-80 கிமீ ரேஞ்சு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த வகையான ஆட்டோவில் முதன்முறையாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்ற மாடலாக அபே இ-சிட்டி விளங்குகின்றது. இதில் ஓட்டுநர்களுக்கு சார்ஜிங் ரேஞ்சு, டிரைவிங் மோட், சர்வீஸ் அலர்ட் மற்றும் மைலேஜ் போன்ற தகவல்களைக் காட்டுகிறது. அபே இ-சிட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு 36 மாதம் அல்லது 100,000 கிமீ (எது முந்தையது) என்ற உத்தரவாதத்துடன் கூடுதலாக 3 வருடங்களுக்கு இலவச பராமரிப்பையும் வழங்குவதாக பியாஜியோ குறிப்பிட்டுள்ளது.. கூடுதலாக, 3 ஆண்டு AMC தொகுப்பை ரூ .3,000 செலவில் வழங்குகின்றது.