நிசான் இந்தியா நிறுவனம், கூடுதல் வசதிகளை பெற்ற டெரானோ எஸ்யூவி மாடலை நிசான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் என்ற பெயரில் ரூ.12.22 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
நிசான் டெரானோ ஸ்போர்ட்
இந்தியாவில் எஸ்யூவி விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நிசான் இந்தியா நிறுவனம் தங்களுடைய சர்வதேச எஸ்யூவி பாரம்பரியத்தை பின்பற்றி கூடுதலான வசதிகள் மற்றும் ஆடம்பர அம்சங்களை கொண்டதாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.
டெரானோ எஸ்யூவி ரக மாடல் 85 ஹெச்பி மற்றும் 105 ஹெச்பி என இரு விதமான மாறுபாட்டில் கிடைத்து வரும் நிலையில், ஸ்போர்ட் எடிசன் மாடல் 85 எச்பி K9K 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 200 என்எம் இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்போர்ட் எடிசன் மாடலின் தோற்ற அமைப்பில், பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள், சிவப்பு மற்றும் கருப்பு பாடி ஸ்டிக்கரிங், கருமை நிற மேற்கூறை, புதிய கிளாடிங் வில் ஆர்ச், இன்டிரியரில் இரு வண்ண கலவையிலான பிரவுன் மற்றும் கருப்பு நிற டேஸ்போர்டு , இருக்கை கருப்பு மற்றும் சிவப்பு கலவையை பெற்று விளங்குகின்றது.
ஸ்போர்ட் எடிசனில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன்நிசான் கனெக்டேட் செயிலி, ஏபிஎஸ், இபிடி மற்றும் ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.
ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ்-கிராஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் நிசான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் விலை ரூ. 12.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)