நிசான் இந்தியா மற்றும் யுனைடட் கலர்ஸ் ஆஃப் பென்ட்டன் இணைந்து வடிவமைத்துள்ள ஃபேஷன் எடிசன் மாடலில் ஃபேஷன் பிளாக் மற்றும் ஃபேஷன் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
நிசான் மைக்ரா ஃபேஷன் எடிசன்
யுனைடட் கலர்ஸ் ஆஃப் பென்ட்டன் ஃபேஷன் நிறுவனத்தின் துனையுடன் மிக நேர்த்தியாக தோற்ற மாறுதலை பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ,இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கின்றது.
தற்போது வந்துள்ள ஃபேஷன் வேரியன்ட் நிசான் பெட்ரோல் சிவிடி மாடல் மட்டுமே கிடைக்கின்றது. இந்த காரில் 6.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நிசான் கனெக்ட், ஸ்போர்ட்டிவ் பாடி ஆஃடிக்கரிங், பிளாக் வீல் கலர்,ஆரஞ்சு இன்ஷர்ட்ஸ் ஆகியவற்றை கொண்டதாக கிடைக்க உள்ளது.
முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பென்ட்டன் பெல்ட்கள் மற்றும் துனைக்கருவிகள் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
நிசான் மைக்ரா ஃபேஷன் எடிசன் விலை ரூ.6.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)