அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காரின் (ASEAN NCAP) ஏசியான் கிராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமையான விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிசானின் மேக்னைட் காரில் 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடியதாக உள்ள இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
டாப் வேரியண்டுகளில் 100 hp பவர் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT வேரியண்ட்) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
குளோபல் என்சிஏபி மையம் பல்வேறு இந்திய கார்களை சோதனை செய்து வரும் நிலையில் டாடா நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் எக்ஸ்யூவி 300 மட்டுமே 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளன. இந்நிலையில் ASEAN NCAP மூலமாக சோதனை செய்யப்பட்ட மேக்னைட் எஸ்யூவி 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதன் முழுமையான அறிக்கையை விரைவில் வெளியாக உள்ளது.
இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை ரூ.5.54 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.10.09 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரை உயர்ந்துள்ளது.