நிசான் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மேக்னைட் காரில் சிறப்பு கஸ்டமைஸ்டு வசதிகளை பெற்ற Gesa (கெஸா) எடிசன் மாடல் விற்பனைக்கு மே 26 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கெசா பதிப்பு ஜப்பானில் உள்ள தியேட்டர்களின் உந்துதலில் உருவாக்கப்பட்ட வசதிகளுடன் வெளிப்படையான இசை சார்ந்த கருப்பொருளை மையமாக கொண்டு ஈர்க்கப்பட்டுள்ள மாடலாக விளங்கும்.
Nissan Magnite Geza
மேக்னைட் கெஸா எஸ்யூவி பதிப்பில் புதிய 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் பெற்றிருக்கும்.
பிற அம்சங்களில் டிராஜெக்டரி ரியர் கேமரா, ஆப் உடன் இணைக்கப்பட்ட வசதிகள் மூலம் கட்டுப்பாடுகள், ஆம்பியன்ட் விளக்குகள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, பீஜ் கலர் சீட் அப்ஹோல்ஸ்டரி போன்றவை கிடைக்கலாம்.
என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது. புதிய ஆர்டிஇ விதிமுறைக்கு ஏற்ற 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
சாதாரன 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் விற்பனை செய்கின்ற ஒரே மாடல் மேக்னைட் எஸ்யூவி மட்டுமே ஆகும். முழுமையான விபரங்கள் மே 26 ஆம் தேதி வெளிவரும்.