இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட புதிய மேக்னைட் எஸ்யூவி காரின் மூலம் நிசான் இந்தியா நிறுவன வரலாற்றில் புதிய மைல்கல்லை நோக்கிய பயணத்தை துவங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட மேக்னைட் எஸ்யூவிக்கு கடுமையான போட்டியாளர்கள் உள்ள நிலையில், 1,50,000 விசாரிப்புகளுடன் மொத்தமாக 15,000 உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவை பெற்றுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படும் நிலையில், ஆன்லைன் மற்றும் டீலர்கள் மூலம் நடைபெறுகின்றது.
மேக்னைட் எஸ்யூவி சிறப்புகள்
இந்த காரில் 1.0L B4D பெட்ரோல் மற்றும் டாப் வேரியண்டில் 1.0L HRA0 டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனை சேர்க்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் இன்ஜின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடியதாக உள்ள இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
அதிகபட்சமாக 100 hp பவர் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT வேரியண்ட்) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
வேரியண்ட் | விலை |
XE | ரூ. 4.99 லட்சம் |
XL | ரூ. 5.99 லட்சம் |
XV | ரூ. 6.68 லட்சம் |
XV Premium | ரூ. 7.55 லட்சம் |
Turbo XL | ரூ. 6.99 லட்சம் |
Turbo XV | ரூ. 7.68 லட்சம் |
Turbo XV Premium | ரூ. 8.45 லட்சம் |
Turbo XL CVT | ரூ. 7.89 லட்சம் |
Turbo XV CVT | ரூ. 8.58 லட்சம் |
Turbo XV Premium CVT | ரூ. 9.35 லட்சம் |
இந்த விலை பட்டியல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும். அதன் பிறகு வேரியண்ட் வாரியாக ரூ.50,000 உயர்த்தப்பட உள்ளது.
4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி காரில்களில் முதல் 50,000 கிலோ மீட்டருக்கு சர்வீஸ் கட்டணம் என்பது ஒரு கிமீ வெறும் 29 பைசா மட்டுமே என நிசான் உறுதிப்படுத்தியுள்ளது.