2020 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிசான் இந்தியாவின் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற EM2 காம்பேக்ட் எஸ்யூவி காரில் கனெக்ட்டிவ் நுட்பங்களை பெற்றிருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
முன்பாகவே இது குறித்தான முதல் டீசரை நிசான் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த மாடலின் டெயில் விளக்கினை டீசராக வெளியிட்டுள்ளது. ரெனோ நிறுவனத்தின் ஹெச்பிசி அல்லது கைகெர் என குறிப்பிடப்படுகின்ற காரின் அதே CMF-A பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரைபர் காரை வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரம் ஆகும். ரெனால்ட் நிறுவனத்தின் HBC காம்பேக்ட் எஸ்யூவி மாடலும் நிசான் நிறுவன புதிய எஸ்யூவி மாடலும் பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.
பொதுவாக சமீபத்தில் விற்பனைக்கு வருகின்ற கார்களில் கனெக்ட்டிவ் நுட்பங்கள் இடம்பெறுவதனை போன்றே இந்த காரிலும் வசதிகள் வழங்கப்பட உள்ளது.
100 hp பவரை வழங்குகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் நிசான் காம்பேக்ட் எஸ்யூவி விலை ரூ.7.00 லட்சத்திற்குள் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.