இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள 2017 ஹூண்டாய் வெர்னா கார் முற்றிலும் மேம்பட்ட புத்தம் புதிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் ரூ. 7.99 லட்சம் முதல் ரூ. 12.61 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.
2017 ஹூண்டாய் வெர்னா கார்
புதிய எலன்ட்ரா மற்றும் எக்ஸென்ட் போன்ற கார்களில் இடம்பெற்றுள்ள மிக அகலமான அறுங்கோண வடிவிலான கிரில் முகப்பை பெற்று விளங்குகின்ற புதிய வெர்னா கார் K2′ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு உறுதியான கட்டுமானம் மற்றும் டிசைன் பெற்றதாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் வசதியுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்சிலும் கிடைக்கப் பெறுகின்றது.
ஒற்றை பாகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள அறுங்கோண வடிவிலான கிரிலுடன் புராஜெக்டர் ஹெட்லேம்ப், புதுப்பிக்கப்பட்ட க்ரோம் பூச்சினை பெற்ற ஹவுசிங் வசதியுடன் கூடியதாக கிடைக்கின்றது. 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் பெற்று பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை கொண்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் பீஜ் மற்றும் கருப்பு என இரு நிற கலவையை பெற்று மிக தாரளமான இடவசதியை வழங்குகின்ற வகையில் 2600 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள வெர்னாவில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றுடன் ஹூண்டாய் ஐபுளூ ஆடியோ ஸ்மார்ட்போன் இணைப்பினை பெற்று க்ரூஸ் கன்ட்ரோல், சன் ரூஃப், போன்றவற்றுடன் இரு ஏர்பேக் ஏபிஎஸ் மற்றும் இபிடி அனைத்து வேரியன்டிலும் உயர்ரக வேரியன்டில் 6 காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ளது.
Dimensions | ஹூண்டாய் வெர்னா |
நீளம் | 4,440 mm |
அகலம் | 1,729 mm |
உயரம் | 1,475 mm |
வீல்பேஸ் | 2,600 mm |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 170 mm |
எஞ்சின்
123 hp பவர் மற்றும் 151Nm டார்க் வெளிப்படுத்தும் 1.6 L காமா பெட்ரோல் மற்றும் 128hp பவர் மற்றும் 260 NM டார்க் வெளிப்படுத்தும் 1.6 L U2 CRDi டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றுள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மேனுவல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.
விபரம் | Hyundai Verna 2017 Petrol | Hyundai Verna 2017 Diesel |
எஞ்சின் | 1,591 cc Gamma Dual VTVT | 1,582 cc U2 CRDi |
பவர் | 123 PS | 128 PS |
டார்க் | 151Nm | 260 NM |
கியர்பாக்ஸ் | 6-speed MT/6-speed AT | 6-speed MT/6-speed AT |
மைலேஜ் | 17.70 km/l (MT)15.92 km/l (AT) | 24.75 km/l (MT)21.02 km/l (AT) |
போட்டியாளர்கள்
மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் போன்றவற்றுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக 2017 ஹூண்டாய் வெர்னா வந்துள்ளது.
விலை
2017 ஹூண்டாய் வெர்னா கார் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியல் விபரம்
வேரியன்ட் | பெட்ரோல் | டீசல் |
E | ₹ 7,99,900 | ₹ 9,19,900 |
EX | ₹ 9,06,900 | ₹ 9,99,900 |
SX | ₹ 9,49,900 | ₹ 11,11,900 |
SX (O) | ₹ 11,08,900 | ₹ 12,39,900 |
EX AT | ₹ 10,22,900 | ₹ 11,39,900 |
SX+ AT | – | ₹ 12,61,900 |
SX (O) AT | ₹ 12,23,900 | – |