இந்தியாவின் பிரபலமான செடான் கார்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரின் புதிய தலைமுறை அதாவது மூன்றாவது தலைமுறை மாடலுக்கான டீசரானது வெளியிடப்பட்டிருக்கின்றது. வரும் மாதங்களில் இந்த மாடலின் விற்பனை துவங்க உள்ளதால் இதே நேரத்தில் புதிய டிசையர் காரும் கடுமையான சவாரி ஏற்படுத்த நவம்பர் 11ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது
புதிய தலைமுறை அமேஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கும் குறிப்பாக ஸ்டைலிங் சார்ந்த மேம்பாடுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஹோண்டா சிவிக் காரின் அடிப்படையில் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. மிக ஸ்டைலிசான எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் உடன் கூடுதலாக எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் நேர்த்தியான கிரில் அமைப்புகளை கொண்டிருப்பது தெளிவாக காட்சிப்படுத்தப்படுகின்றது. மேலும் அகலமான ஏர் டேம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
எஞ்சின் ஆப்ஷனில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது தொடர்ந்து 90 hp மற்றும் 110Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்கும் கூடுதலாக இந்த முறை சிஎன்ஜி ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த முறையாவது அறிமுகம் செய்யப்படுமா.? என மிக முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
விற்பனைக்கு வரும் தேதி குறித்து தற்பொழுது என்ற தகவலும் இல்லை ஆனால் இந்த மாதத்தின் இறுதி மாதங்களில் புதிய ஹோண்டா அமேஸ் விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.