பிரேசிலில் ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ள புதிய டெரா காம்பேக்ட் எஸ்யூவி நவீனத்துவமான வசதிகளுடன் MQ A0 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ளது.
டெரா காரினை முழுமையாக அறிமுகம் செய்துள்ள இந்நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து விபரங்களையும் வெளியிடவில்லை. இந்திய சந்தைக்கு வருமா என்ற கேள்விக்கான விடை அதிகாரப்பூர்வமாக ஃபோக்ஸ்வேகன் அறிவிக்கவில்லை என்றாலும் ஸ்கோடா கைலாக் மாடலை பின்பற்றியே டெரா வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்திய சந்தைக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டெராவின் நீளம் 4 மீட்டருக்கு குறைவாக அமைந்திருப்பதுடன் 2,566 மிமீ வீல்பேஸ் பெற்று மிக நேர்த்தியான புதிய கிரில் அமைப்புடன் கிடைமட்டமான எல்இடி ரன்னிங் விளக்குடன் எல்இடி ஹெட்லைட் பெற்று க்ரோம் பட்டை பெற்றதாக அமைந்துள்ளது.
பக்கவாட்டில் 17 அங்குல அலாய் வீல் கொண்டு மிக நேர்த்தியான சில பில்லர் வளைவுகளை பெற்று பின்புறத்தில் எல்இடி டெயில்லைட் மத்தியில் லோகோ கருமை நிறத்திலான ஸ்டிரிப் உள்ளது.
இன்டீரியர் அமைப்பு மற்ற புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களில் உள்ளதை போன்றே டேஸ்போர்டினை பகிர்ந்து கொண்டு 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் மிகவும் தாராளமான இடவசதி உள்ளது.
காரில் இடம்பெற போகின்ற எஞ்சின் விபரங்களை தெளிவுப்படுத்தவில்லை என்றாலும் கைலாக் போல டெரா காரில் 115bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கும்.
இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் ரூ. 8.50 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.