டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஹைலக்ஸ் ஹைபிரிட் 48V பிக்கப் டிரக்கின் நுட்ப விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் ஐரோப்பாவில் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்ட்டலாம்.
இந்திய சந்தையில் ஹைலக்ஸ் 48V ஹைபிரிட் மாடல் விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஃபார்ச்சூனர் மாடலிலும் இதே ஹைபிரிட் நுட்பத்தை கொண்டு வரக்கூடும்.
Toyota Hilux Hybrid 48V specs
தனது செயல்திறனில் எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து 2.8 லிட்டர் ஹைலக்ஸ் டீசல் என்ஜினில், மாசு உமிழ்வை குறைக்கும் நோக்கில் ஹைப்ரிட் 48V சிஸ்டம் சேர்ப்பதன் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெரிதாக இடத்தை ஆக்கிரிக்காமல் பின்புற இருக்கைக்கு அடிப்பகுதியில் வெறும் 7.6 கிலோ எடை கொண்டுள்ள 48V லித்தியம் பேட்டரியை சார்ஜ் செய் சிறிய மோட்டார் ஜெனரேட்டரை பெல்ட் அமைப்பைப் பயன்படுத்தி இயக்குகிறது. முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளும் பொழுது பேட்டரி 16 hp (12 kW) பவர், 65 Nm டார்க் வழங்குகின்றது.
எனவே, ஒட்டுமொத்தமாக 2.8-லிட்டர் டீசல் என்ஜின் DOHC, 16 வால்வு பெற்றது 3,400rpm-ல் 204 hp (150 கிலோவாட்) பவர் மற்றும் 1,600 முதல் 2,800 rpm-ல் 500Nm டார்க் வழங்குகின்றது.
ஹைலக்ஸ் ஹைபிரிட் 48V என்ஜின் மூலம் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் செயல்திறன் வழங்குவதுடன் இந்த பிக்கப் டிரக்கின் புகழ்பெற்ற ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையுடன், த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மேம்படுத்தப்பட்டு மேலும், கரடுமுரடான நிலப்பரப்பில் செல்லும்போது மற்றும் கீழ்நோக்கி செல்லும் பொழுதும் ரீஜெனேரேட்டிவ் செய்யும் பிரேக்கிங் மூலம் மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோட் செயல்திறன் கொண்டது.
புதிய Hilux Hybrid 48V பிக்கப் டிரக் 5,325 மிமீ நீளம், 1,900 மிமீ அகலம் மற்றும் 1,815 மிமீ உயரம் கொண்டுள்ள மாடல் 1,525 மிமீ சுமை தாங்கும் நீளம் உள்ள பெட்டினை பெற்றுள்ளது. டிரைவிங் முறையில் தொடர்ந்து 3,500 கிலோ சுமையை இழுத்து செல்லவும் மற்றும் பேலோட் 1,000 கிலோ வரை எடுத்துச்செல்வதில் எந்த சமரசமும் இல்லாமல் உள்ளது.
1968 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட ஹைலக்ஸ் உலகெங்கிலும் 180க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விற்பனை செய்யப்படுகிறது, டொயோட்டா ஹைலக்ஸ் ஆறு வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் உலகளவில் 21 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.