பிக்ஸ்டெர் கான்செப்ட்டை நேரடியாக உற்பத்தி நிலைக்கு எடுத்து சென்றுள்ள ரெனால்ட் கீழ் செயல்படும் டேசியா பிராண்டில் டஸ்ட்டர் மிக அகலமான மற்றும் கூடுதல் நீளம் கொண்ட எஸ்யூவி ஆக 5 இருக்கை பெற்றதாக வரவுள்ளது.
முன்புறத்தில் புதிய எல்இடி ஹெட்லைட், மாற்றியமைக்கப்பட்ட பம்பர் பக்கவாட்டில் வீல் ஆர்ச் உயரமாக சதுரமாக மாற்றியமைத்துள்ளது, பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் கொண்டு அகலமான பம்பர் பெற்றுள்ளது. இன்டிரியர் தொடர்பான படங்கள் தற்பொழுது கிடைக்கவில்லை.
புதிய டஸ்ட்டர் உலகளவில் மூன்று என்ஜின் விருப்பங்களைக் கொண்டிருக்கின்றது. 120hp, 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல், 140hp, 1.2-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் 170hp, 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது ஃப்ளெக்ஸ்-எரிபொருளுக்கு இணக்கமாக உள்ளது. நாளை டேசியா டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் நிசான் டெரோனோ எஸ்யூவி 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளது.