சி-பிரிவு எஸ்யூவி சந்தையில் ஃபோர்டு-மஹிந்திரா கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் புதிய எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு சி-எஸ்யூவி காரின் முதல் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ஃபோர்டு மற்றும் மஹிந்திரா கூட்டணியில் பினின்ஃபரினா டிசைன் அம்சங்களுடன் உருவாக்கப்படுகின்ற புதிய எக்ஸ்யூவி 500 அடிப்படையிலான சி-எஸ்யூவி காரின் முதல் முறையாக இணையத்தில் ஸ்பை படங்கள் வெளியானது. இந்த எஸ்யூவி கார் இரண்டு நிறுவனங்களும் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரம், இன்ஜின் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுவதுடன், தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களுடன் நிறுவனத்துக்குரிய வகையிலான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
ஃபோர்டு எதிர்கால எஸ்யூவி முழுவதும் தயாரிப்புகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்ற முன்பக்க கிரில் அமைப்பு ஃபோர்டின் முந்தைய எஸ்யூவிகளை போன்றே கிடைமட்டமான க்ரோன் லைன்களை கொண்டுள்ளது. முன்பக்க அமைப்பு மட்டும் வெளியாகியுள்ளது.
புதிய எக்ஸ்யூவி500 காரின் விற்பனை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாக உள்ளது. ஃபோர்டு காரின் உற்பத்தி மஹிந்திராவின் ஆலையில் நடைபெறும், 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படலாம்.