வரும் ஜனவரி 2025ல் விற்பனைக்கு வரவுள்ள கியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் மிக தாராளமான இடவசதி மற்றும் பல்வேறு நவீனத்துவமான வசதிகளுடன் ICE மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய சந்தையில் சொனெட் மற்றும் செல்டோஸ் இரண்டு எஸ்யூவிகளை விற்பனை செய்து வருகின்ற நிலையில் கூடுதலாக வரவுள்ள இந்த மாடலும் ரூ.10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் ரூபாய் விலைக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் மற்ற இரு மாடல்களுடன் சற்று வேறுபாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1.2-லிட்டர் பெட்ரோல், 1.0-லிட்டர் GDi டர்போ பெட்ரோல், மற்றும் 1.5-லிட்டர் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படலாம்.
சமீபத்தில் வெளியான டீசரில் வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாக இயங்கும் வகையிலான பனரோமிக் சன்ரூஃப் சென்று போனது இடம்பெற்று இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
விற்பனைக்கு வரவுள்ள சிரோஸ் மாடல் நான்கு மீட்டருக்கும் கூடுதலாக இருக்கலாம் அதே நேரத்தில் 4.4 மீட்டருக்கும் குறைவாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையான எல்இடி விளக்குகள் மற்றும் இன்டீரியரில் மிக தாராளமான இடவசதி பின்புறத்திலும் எல்இடி டெயில் லைட் போன்றவை எல்லாம் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.
வரும் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும் விற்பனைக்கு அனேகமாக ஜனவரி 17ஆம் தேதி பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம்.