கியா இந்தியா நிறுவனத்தின் சொனெட் ஃபேஸ்லிஃப்ட் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலுக்கு முன்பதிவு டிசம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி முதல் துவங்குகின்றது. சொனெட் காரை விரைவாக டெலிவரி பெற விரும்பினால் K-Code முறையை பயன்படுத்தலாம்.
இந்த K-Code முறையை எந்த கியா கார் வாடிக்கையாளரும் உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த K-Code ஆனது டிசம்பர் 20 ஆம் தேதி நள்ளிரவு 12;00AM முதல் 11.59PM வரை கியா இனையதளம் அல்லது MyKia ஆப் முன் பதிவு செய்துக் கொள்ளலாம். இதன் மூலம் விரைவான டெலிவரியை பெறலாம்.
2024 Kia Sonet
2024 சொனெட் எஸ்யூவி 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று என்ஜின்களும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. டெக் லைன், ஜிடி லைன் மற்றும் எக்ஸ்-லைன் ஆகிய மூன்று வகையின் அடிப்படையில் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX மற்றும் X-Line என 7 விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் டெக் லைனில் மட்டுமே கிடைக்கிறது.
118 hp பவர் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும். அடுத்து, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் வரவுள்ளது. அதே நேரத்தில் 1.0-டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-டீசல் மூன்று வகையிலும் கிடைத்தாலும் ஆனால் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது HTX+, GTX மற்றும் X-லைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்க உள்ளது.
முதல்நிலை ADAS பாதுகாப்பில் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் முன்னோக்கி மோதல் தவிர்க்க உதவும் வகையில் கார், பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர், லேன் கீப் அசிஸ்ட், லேன் ஃபாலோ அசிஸ்ட், லேன் புறப்பாடு எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், ஓட்டுனர் கவன குறைவை எச்சரிக்கை, வாகனம் புறப்படும் எச்சரிக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.
வரும் 2024 ஜனவரி முதல் வாரத்தில் விற்பனைக்கு கியா சொனெட் எஸ்யூவி ரூ.8 லட்சத்துக்குள் அறிமுகம் செய்யப்படலாம். டெலிவரி உடனடியாக ஜனவரி மாத மத்தியில் அல்லது இறுதியில் துவங்கலாம்.
சொனெட் எஸ்யூவி காருக்கு போட்டியாக டாடா நெக்ஸான், மாருதி சுசூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, ரெனோ கிகர், மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றை எதிர்க்கொளுகின்றது.