வரும் நவம்பர் 5 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹூண்டாய் ஐ20 காருக்கான முன்பதிவு ஆன்லைன் வாயிலாக ரூ.21,000 கட்டணமாக செலுத்தி பதிவு செய்யலாம்.
ஐ20 இன்ஜின் ஆப்ஷன்
5 வேக மேனுவல் மற்றும் ஐவிடி (சிவிடி) கியர்பாக்ஸ் பெற்ற 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.
அடுத்து 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 100 பிஹெச்பி மற்றும் 240 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்பட உள்ளது. 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
ஹூண்டாய் ஐ20 டிசைன்
தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட மிகவும் நவீனத்துவமான டிசைன் அம்சத்தைப் பெற்ற ஐ20 காரின் முகப்பு கேஸ்கேடிங் கிரில் மிக நேர்த்தியாகவும், புதிய ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் போன்றவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு அம்ப்பில் மிக நேர்த்தியான அலாய் வீல் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் Z வடிவ எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 காரின் இன்டிரியரில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த ப்ளூலிங்க் டெக்னாலஜி சேர்க்கப்பட உள்ளது.
புதிய ஐ20 காரில் Magna, Sportz, Asta, மற்றும் Asta (O) என நான்கு விதமான வேரியண்டில் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷனுடன் 5 விதமான கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு மொத்தம் 13 வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.
போட்டியாளர்கள்
புதிய ஹூண்டாய் ஐ20 காரின் போட்டியாளர்களாக சுசூகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸா, மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்றவை விளங்க உள்ளது.
web title : 2020 Hyundai i20 launch and bookings details