சர்வதேச ஹூண்டாய் ‘Sensuous Sportiness’ வடிவ மொழியை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான புதிய கிரெட்டா காரினை டீலர்களுக்கு அனுப்ப துவங்கியுள்ளதால் ஜனவரி 16 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட்ட உடனே டெலிவரியை துவங்க உள்ளது.
முழுமையாக வெளிப்புற தோற்ற அமைப்பு கிடைத்துள்ளதால் கிரெட்டா காரின் தோற்றம் மேம்பட்டு நவீனத்துவமான வடிவமைப்பினை பெற்ற முன்புறம் மற்றும் பின்புறத்தில் கூடுதல் மாற்றங்களுடன் பக்கவாட்டில் அலாய் வீல் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.
புதிய ஹூண்டாய் கிரெட்டா
கிரெட்டா எஸ்யூவி காரில் உள்ள முன்பக்க வடிவமைப்பு கிரில் முற்றிலும் மேம்பட்டு கிடைமட்ட கோடுகளுடன் கூடியதாகவும், புதிய பம்பரில் இரு வண்ண கலவை சேர்க்கப்பட்டு ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் கீழ்பகுதியில் அமைந்து கவர்ச்சிகரமாகவும், முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. செவ்வக வடிவமைப்பினை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி லைட் பார் பானெட் கீழாக கொடுக்கப்பட்டு எல்இடி ரன்னிங் விளக்கும் உள்ளது.
பின்புற பம்பர் மற்றும் டெயில்லைட் உள்ள பகுதியில் கருமை நிறத்தை கொடுத்து எல்இடி லைட் பார் புதுப்பிக்கப்பட்ட டெயில்கேட் விளக்கு, ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுடன் இணைந்துள்ளது. பக்கவாட்டு பாடி பேனல்களில் எந்த மாற்றமும் இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் மட்டுமே கவனத்தை பெறுகின்றது
இன்டிரியர் தொடர்பான படங்களை ஏற்கனவே ஹூண்டாய் வெளியிட்டுள்ளதால் இரட்டை செட்டப் பெற்ற கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25 அங்குல டிஸ்பிளே கொண்டதாக அமைந்துள்ளது.
புதிய கிரெட்டாவில் 70க்கு மேற்பட்ட கார் தொடர்பான இணைக்கப்பட்ட அம்சங்களை பெற உள்ளது. குறிப்பாக, நேவிகேஷன், ஜியோ-சாவ்ன் மியூசிக் ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட வசதிகளுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கொண்டிருக்கலாம் மேலும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அனைத்தும் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டு இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுகின்றது.
160 hp பவர் வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுகின்ற புதிய கிரெட்டா மற்ற என்ஜின்களான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்று இந்திய சந்தையில் கிடைக்கின்ற தனது சகோதரன் கியா செல்டோஸ் உட்பட டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகன், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், டாடா ஹாரியர் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
image – harshvlogs