Car News க்ரெட்டா எலெக்ட்ரிக் டீசரை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா.! Last updated: 1,January 2025 1:34 pm IST MR.Durai Share ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் டீசர்ஜனவரி 17 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் இந்தியாவின் பிரபலமான க்ரெட்டா அடிப்பட்டையிலான எலெக்ட்ரிக் காருக்கான முதல் டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.குறிப்பாக க்ரெட்டா இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலாக மாதந்தோறும் 12,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கதாகும். சமீபத்தில் இந்நிறுவனம் உள்நாட்டிலே பேட்டரி செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து பெற உள்ளதை உறுதி செய்துள்ளது.ஏற்கனவே வெளிவந்த சில தகவல்களின் மூலம் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரில் 45 kWh மற்றும் 60 kWh பேட்டரி பேக் என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த காரின் ரேஞ்ச் 300 கிமீ முதல் 550 கிமீ வெளிப்படுத்தலாம்.இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முன்னோடியாக உள்ள டாடா மோட்டார்சின் கர்வ் இவி, எம்ஜி இசட்எஸ் இவி, விண்ட்சர் இவி உள்ளிட்ட மாடல்களுடன் மாருதியின் முதல் எலெக்ட்ரி்க் இவிட்டாரா ஆகியவற்றுடன் மஹிந்திராவின் BE 6 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் க்ரெட்டா எலெக்ட்ரிக் ரூ.17 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம். TAGGED:Hyundai CretaHyundai Creta EV Share This Article Facebook Previous Article QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா Next Article 473 கிமீ ரேஞ்ச்.., க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹூண்டாய்