Car News புதிய ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது Last updated: 26,June 2020 8:44 am IST MR.Durai Share புதிய ஹோண்டா சிட்டி கார்ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் புத்தம் புதிய ஐந்தாம் தலைமுறை சிட்டி காருக்கு முன்பதிவை அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.21,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.2020 ஹோண்டா சிட்டி காரின் நீளம் 100 மிமீ வரையும், அதே நேரத்தில் அகலம் 53 மிமீ அதிகரித்துள்ளது. உயரம் இப்போது 28 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த காரின் நீளம் அதிகரித்த போதிலும், சிட்டி காரின் வீல் பேஸ் 11 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் மிக அகலமான க்ரோம் கிரில் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் இணைக்கபட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் 16 அங்குல அலாய் வீல், சன் ரூஃப் போன்றவற்றை கொண்டிருக்கும்.அதிகபட்சமாக 121 ஹெச்பி பவரை வழங்குகின்ற புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ARAI சான்றிதழ்படி மைலேஜ் லிட்டருக்கு 17.8 கிமீ (6 வேக மேனுவல்) மற்றும் 18.4 கிமீ (சிவிடி ஆட்டோ) வழங்கப்பட உள்ளது. அடுத்தப்படியாக பிஎஸ்-6 முறைக்கு மாற்றப்பட்டு 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் வழங்கப்பட உள்ளது.இந்திய சந்தையில் முதன்முறையாக அலெக்ஸா ஆதரவு பெற்றதாக வரவுள்ள சிட்டி காரில் 8.0 அங்குல இன்ஃபோயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் ஹோண்டா கனெக்ட் எனப்படும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த 32 வசதிகளை வழங்குகின்றது.புதிய ஹோண்டா சிட்டி கார் இன்டிரியர்7.0 டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஆட்டோ டிம் IRVM, எலக்ட்ரிக் சன் ரூஃப் என பல்வேறு வசதிகளுடன் பேடெல் ஷிஃப்டர், ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ் என்ட்ரி கோ மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் போன்றவற்றை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.ஹோண்டா சிட்டி காரின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. TAGGED:Honda City Share This Article Facebook Previous Article புதிய ஹோண்டா கிரேஸியா 125 விற்பனைக்கு அறிமுகமானது Next Article பிஎஸ்-6 ஹோண்டா லிவோ பைக்கின் டீசர் வெளியீடு