இந்திய பயணிகள் வாகன சந்தையில் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ரூபாய் 11.05 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் அல்லாத மாடலை விட ரூபாய் 30,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எக்ஸ்புளோர் 5 டோர் மற்றும் 3 டோர், எக்ஸ்ட்ரீம் 3 டோர் மாடல்களில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் எக்ஸ்பிடியேஷன் மாடலில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்படவில்லை.
ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஏபிஎஸ்
86 hp குதிரைத்திறன் மற்றும் 230 Nm முறுக்கு விசை பெற்ற 2.6 லிட்டர் பிஎஸ் 4 தர மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த என்ஜினில் ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.
அடுத்ததாக குர்கா எக்ஸ்ட்ரீம் 2.2 லிட்டர் என்ஜின் பெற்ற மாடலில் 140 HP குதிரைத்திறன் மற்றும் 321 Nm முறுக்கு விசை கொண்டதாக உள்ளது. இதிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மேலும் எக்ஸ்ட்ரீம் மாடலில் சிறிய அளவிலான தோற்ற மாறுதல் மற்றும் எல்இடி டர்ன் இன்டிகேட்டர், புதிய பாடி ஸ்டிக்கரிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள BNVSAP விதிகளுக்கு உட்பட்டு மேம்பட்ட தரம் மற்றும் அடிப்படையான ஏர்பேக் உட்பட இருக்கை பட்டை வார்னிங், ரியர் பார்க்கிங் சென்சார், மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் போன்றவற்றை அடுத்த சில மாதங்களில் பெற உள்ளது.
ஃபோர்ஸ் குர்கா ஏபிஎஸ் விலை பட்டியல்
Gurkha Xplorer 4×4 3-Door – ரூ. 11,05,000/-
Gurkha Xplorer 4×4 5-Door – ரூ.. 12,55,000/-
Gurkha Xtreme 4×4 3-Door – ரூ. 13,30,000/-
(all prices, ex-showroom)