சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டிருந்த நான்காம் தலைமுறை 2025 ஹோண்டா அமேஸ் காரருக்கான அறிமுக தேதியை டிசம்பர் 4 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. சில புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புறத்திலும் பல்வேறு நவீன வசதிகளுடன், டிசைன் மாற்றங்களையும் கொண்டிருக்கும்.
எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றும் இல்லாமல் தொடர்ந்து அமேஸில் 1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்க உள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை இந்த முறை எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக போட்டியாளர்களான புதிய டிசையர், ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர் போன்றவற்றை எதிர்கொள்கின்ற அமேஸ் மாடலானது இந்த முறை பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கலாம் எனது பார்க்கப்படுகின்றது குறிப்பாக அடிப்படையான ஆறு ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் டிஜிட்டல் இன்ஃபோடையின்மெண்ட் சிஸ்டம் போன்ற எல்லாம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முன்புறத்தில் எல்இடி புராஜெக்டர் விளக்கு மற்றும் தேன்கூடு கிரில் அமைப்பு உள்ளிட்டவை சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற சிவிக் காரில் இருந்து பெறப்பட்டது போல அமைந்திருக்கின்றது மற்றபடி பக்கவாட்டு தோற்றம், இன்டீரியர் தொடர்பான எந்த ஒரு டீசரும் தற்பொழுது வெளியாகவில்லை.
விற்பனையில் உள்ள ஹோண்டா அமேஸ் மாடலின் ஆரம்ப விலை ₹7.20 லட்சத்திற்குள் தொடங்கும் நிலையில் புதிய மாடல் அனேகமாக குறைந்த விலை வேரியண்ட் விற்பனைக்கு வருமா அல்லது தொடர்ந்து கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுமா என்பதனை டிசம்பர் 4ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.