சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையம் (GNCAP) 2024 ஆம் ஆண்டிற்கான டாடா நெக்ஸான் எஸ்யூவியை பாதுகாப்பு தொடர்பான சோதித்த நிலையில் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.
விற்பனைக்கு நெக்ஸானை வெளியிட்ட முதலே பாதுகாப்பில் டாடா மோட்டார்ஸ் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளமால் திறன் மிகுந்த பாதுகாப்பான கட்டுமானத்தை வழங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட புதிய நெக்ஸான் தற்பொழுது ரூ.8.15 லட்சம் முதல் துவங்கி ரூ.15.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை சுமார் 77 வேரியண்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகின்ற காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை பெற்றுள்ளது.
Tata Nexon 5 Star Ratings – GNACP
GNCAP மையத்தின் புதிய பாதுகாப்பு தர சோதனை கடுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் சோதிக்கப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி மாடல் வயது வந்தோருக்கான பயணிகள் பாதுகாப்பில் (adult occupancy protection – AOP) பெற வேண்டிய அதிகபட்ச 34 புள்ளிகளுக்கு 32.22 புள்ளிகளும், மேலும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக (child occupancy protection – COP) பெற வேண்டிய 49 புள்ளிகளுக்கு 44.52 பெற்றுள்ளதால் 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது,
கூடுதலாக இந்த SUV முன்புறம், பக்கவாட்டு மற்றும் பக்கவாட்டு போல் மூலம் மோதப்படும் சோதனைகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதை சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
டாடா நெக்ஸான் எஸ்யூவி பாதுகாப்பு அம்சங்கள்;
அடிப்படையாக அனைத்து வேரியண்டிலும் ஆறு ஏர்பேக்குகள், ESC, ABS உடன் EBD, சீட்பெல்ட் நினைவூட்டல் மற்றும் ISOFIX மவுண்ட் தரநிலை கொண்டதாக அமைந்துள்ள காரில் பிளைண்ட் வியூ மானிட்டர், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் உள்ளன.