நிசான் இந்தியா தயாரிப்பில் உலகளவில் 65 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகின்ற புதிய மேக்னைட் எஸ்யூவி விலை ரூ.5.99 லட்சம் முதல் துவங்குகிறது. முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு அறிமுக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்ப விலை ரூபாய் 6.09 லட்சம் ஆகும்.
2024 Nissan Magnite
பல்வேறு பிரிமீயம் சார்ந்த மேம்பாடுகளை பெற்றுள்ள மேக்னைட் எஸ்யூவி மாடலின் முகப்பு கிரில் அமைப்பு, புதிய ஆட்டோ எல்இடி புராஜெக்டர் விளக்குகள், பம்பர் உள்ளிட்ட இடங்களில் சிறிய மாறுதல்களை கொண்டிருப்பதுடன், புதுப்பிக்கப்பட்ட 16 அங்குல அலாய் வீல் டிசைன் பெற உள்ளது. மற்றபடி, பின்புறத்தில் உள்ள பம்பர் மற்றும் M வடிவத்தை நினைவுபடுத்தும் டெயில் லைட் சிறிய மாற்றங்களை கொண்டிருக்கின்றது.
புதிய ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், புதிய டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் ரிமோட் ஸ்டார்ட் உடன் புதுப்பிக்கப்பட்ட இன்டீரியரில் இரட்டை வண்ணத்துடன் புதிய கிராபிக்ஸ் பெற்ற 7.0-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைப் பெறுகிறது.
பாதுகாப்பு அம்சங்களில் இப்போது ஆறு ஏர்பேக்குகள், ESC, மூன்று-புள்ளி சீட்பெல்ட்கள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் நினைவூட்டல்களும் உள்ளன.
எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் தற்பொழுது வழங்கப்படவில்லை. 1.0 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவிதமாக கிடைக்கின்றது.
1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து, 100 hp பவர் வெளிப்படுத்தும் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் ஆனது 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
- 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகவும்
- சிவிடி கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 17.4 கிமீ ஆகும்.
Nissan Magnite facelift 2024 Price list
1.0 NA Engine |
Visia MT- Rs. 5.99 lakh |
Visia AMT- Rs. 6.59 lakh |
Acenta MT- Rs. 7.14 lakh |
Acenta AMT- Rs. 7.64 lakh |
N-Connecta MT- Rs. 7.86 lakh |
N-Connecta AMT- Rs. 8.36 lakh |
Tekna MT- Rs. 8.75 lakh |
Tekna AMT- Rs. 9.25 lakh |
1.0 Turbo petrol |
N-Connecta MT- Rs. 9.19 lakh |
Acenta CVT- Rs. 9.79 lakh |
Tekna MT- Rs. 9.99 lakh |
Tekna+ MT- Rs. 10.35 lakh |
N-Connecta CVT- Rs. 10.34 lakh |
Tekna CVT- Rs. 11.14 lakh |
Tekna CVT+- Rs. 11.50 lakh |