4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ள மேம்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான கியா சொனெட் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்கி ரூ.15.69 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் உள்ள மிக கடுமையான போட்டியாளர்களில் ADAS நுட்பத்தை பெற்ற இரண்டாவது மாடலாகும்.
சொனெட் எஸ்யூவி மாடலில் கொடுக்கப்பட்டுள்ள அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்பு ஆனது முதல்நிலை அம்சங்கள் பெற்றுள்ளது. கடந்த 20 ஆம் தேதி முதல் இந்த மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
2024 Kia Sonet
சொனெட்டில் டெக் லைன், ஜிடி லைன் மற்றும் X-Line என மூன்று விதமான அடிப்படையில் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 வேரியண்டுகளில் மொத்தமாக 11 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.
82 hp பவர், 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மட்டுமே பெற்றுள்ள மாடல் மைலேஜ் 18.83kmpl ஆகும். அடுத்து, 118 hp பசொனெட் காரின் மைலேஜ்வர் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும். சொனெட் காரின் மைலேஜ் 18.70 Kmpl வழங்கும், அடுத்து 7 வேக DCT கியர்பாக்ஸ் மைலேஜ் 19.20kmpl ஆகும்.
இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT பெற்ற மாடல் 22.30kmpl மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 18.60kmpl ஆகும்.
டாப் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ள ADAS Level 1 பாதுகாப்பில் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் கார், பாதசாரி, இருசக்கர வாகனங்கள் மீது மோதல் தவிர்க்க உதவும், லேன் கீப் அசிஸ்ட், லேன் ஃபாலோ அசிஸ்ட், லேன் புறப்பாடு எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், ஓட்டுனர் கவன குறைவு தொடர்பான எச்சரிக்கை, வாகனம் புறப்படும் எச்சரிக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.
சில குறிப்பிடதக்க வசதிகளை பெறுகின்ற சொனெட் காரில் முன்பக்க இரட்டை ஏர்பேக், முன் இருக்கை பக்க ஏர்பேக் மற்றும் பக்கவாட்டில் திரை ஏர்பேக்குகள் பெற்றுள்ளது. இபிடி உடன் ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக் ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்- அசிஸ்ட் கன்ட்ரோல் தொடங்கவும், பின்புற பார்க்கிங் சென்சார்கள், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டயர் பிரஷர் மானிட்டர், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.
Kia Sonet rivals
4 மீட்டர் பிரிவில் உள்ள முதன்மையான டாடா நெக்ஸான் எஸ்யூவி உட்பட போட்டியாளர்களான ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா XUV400, மாருதி பிரெஸ்ஸா, மாருதி ஃபிரான்க்ஸ் . நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் ஆகியவற்றுடன் சந்தையை சொனெட் எதிர்கொள்ளுகின்றது.
2024 Kia Sonet facelift Price list
Engine | Transmission | Variant | Ex-showroom price |
1.2-litre NA petrol | 5 MT | HTE | ₹ 7,99,000 |
HTK | ₹ 8.79,000 | ||
HTK+ | ₹ 9,90,000 | ||
1.0-litre turbo petrol | iMT | HTK+ | ₹ 10,49,000 |
HTX | ₹ 11,49,000 | ||
HTX+ | ₹ 13,39,000 | ||
7 DCT | HTX | ₹ 12,29,000 | |
GTX+ | ₹ 14,50,000 | ||
X-line | ₹ 14,69,000 | ||
1.5-litre diesel | 6 MT | HTE | ₹ 9,79,000 |
HTK | ₹ 10,39,000 | ||
HTK+ | ₹ 11,39,000 | ||
HTX | ₹ 11,99,000 | ||
HTX+ | ₹ 13,69,000 | ||
6 iMT | HTX | ₹ 12,60,000 | |
HTX+ | ₹ 14,39,000 | ||
6 AT | HTX | ₹ 12,99,000 | |
GTX+ | ₹ 15,50,000 | ||
X-Line | ₹ 15,69,000 |