ஜனவரி 16ல் விற்பனைக்கு வெளியான 2024 ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) எஸ்யூவி மாடல் மிக குறுகிய காலத்தில் 51,000க்கு அதிகமான முன்பதிவினை பெற்று அசத்தியுள்ளது. மற்ற போட்டியாளர்களை விட தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் ADAS உள்ளிட்ட நுட்பங்களை பெற்று கிரெட்டா முன்னிலை வகித்து வருகின்றது.
குறிப்பாக, இந்நிறுவனம் கிரெட்டா எஸ்யூவி மாடலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் விற்பனை செய்து வருகின்றது.
New Hyundai Creta
கிரெட்டாவில் சுமார் 19க்கு மேற்பட்ட வேரியண்டுகளில் கிடைக்கின்ற நிலையில் டாப் வேரியண்டில் இடம்பெற்றுள்ள ADAS பாதுகாப்பு தொகுப்பின் மூலம் முன்புற மோதலை தவிரக்கும் எச்சரிக்கை, ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் செட் அன்ட் கோ, பிளைன்ட் ஸ்பாட் வியூ, ஹெட்லைட் அசிஸ்ட் உள்ளிட்ட 19க்கு மேற்பட்ட வசதிகள் பெற்றுள்ளது.
116 hp பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 115hp பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 bhp பவரை வழங்குகின்றது.
2024 ஹூண்டாய் கிரெட்டா காரின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை ரூ.13.85 லட்சம் முதல் ரூ.25.54 லட்சம் வரை அமைந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் பெர்ஃபாமென்ஸ் வழங்கும் வகையில் மேம்பட்ட நுட்ப்பத்தை பெற்ற கிரெட்டா N-line விற்பனைக்கு ரூ.21.50 லட்சத்தில் வெளியிடப்பட உள்ளது.