இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8.41 லட்சம் விலைக்குள் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அதிகம் விற்பனையாகின்ற ஹேட்ச்பேக் கார்களில் ஸ்விஃப்ட் முதன்மை வகித்து வருவது குறிப்பிடதக்கதாகும்.
முந்தைய மாடலை விட ரூ.15,000 முதல் ரூ.24,000 வரை விலை உயர்த்தபட்டுள்ள மாடலில் டூயல் டோன் நிறங்கள், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
2021 மாருதி சுசூகி ஸ்விஃப்ட்
டிசையர் காரில் இடம்பெற்றிருக்கின்ற புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12B அதிகபட்சமாக 90 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்களில் கிடைக்கின்றது.
ARAI சான்றிதழ் படி 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற இன்ஜின் லிட்டருக்கு 23.20 கிமீ மைலேஜ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் லிட்டருக்கு 23.76 கிமீ வெளிப்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 2 கிமீ வரை கூடுதலாக கிடைக்கின்றது.
தோற்ற அமைப்பில் முன்புற கிரில் தேன்கூடு தோற்ற அமைப்புடன் மத்தியில் க்ரோம் ஃபினீஷ் செய்யப்பட்ட ஸ்லாட் வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட பனி விளக்குடன் பின்புறத்தில் சிறிய அளவிலான பம்பர் மாற்றங்களை கொண்டிருக்கும். வெள்ளை நிற மாடலுக்கு மேற்கூறை கருப்பு, சிவப்பு நிறத்துடன் மேற்கூறை கருப்பு நிறம் மற்றும் நீல நிறத்துடன் மேற்கூறை வெள்ளை நிறம் என மொத்தமாக மூன்று டூயல் டோன் நிறங்களை கொண்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் சிறிய அளவில் மட்டும் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றிருக்கின்ற ஸ்விஃப்டில் ஃபேபரிக் அப்ஹோல்ஸ்ட்ரி உட்பட 4.2 அங்குல கிளஸ்ட்டர், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.