உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரன சீனாவின் BYD (Build Your Dream) எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் $ 1பில்லியன் (ரூ.8,000 கோடி) இந்திய முதலீட்டை மோடி அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் டெஸ்லா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளருக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் BYD நிறுவனம், இந்திய சந்தையில் ஏற்கனவே தனது கார்களை விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவிலும் அமோக ஆதரவினை பெற்று வருகின்றது.
BYD Electric
இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட நெருக்கடியான சூழல் காரணமாக பல்வேறு சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கிரேட் வால் மோட்டார்ஸ் முதலீடு திட்டங்களுக்கு மோடி அரசு அனுமதி வழங்காத காரணத்தால் திட்டத்தை கைவிட்டுள்ளன. எம்ஜி மோட்டார் நிறுவனம், தனது முதலீட்டை விரிவுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றது. இதற்காக இந்திய கூட்டாளிகளை தேடி வருகின்றது.
ஹைத்திராபாத் மெகா என்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து BYD இதற்கான அனுமதியை தொழில் மற்றும் உள் துறையை மேம்படுத்துவதற்கான துறையிடம் கோரிய நிலையில், DPIIT (Department for Promotion of Industry and InternaL) அதன் முன்மொழிவில், இந்த வசதியில் இருந்து ஆண்டுக்கு 10,000-15,000 எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கும் முறையில் ஆட்டோ 3 மற்றும் E6 ஆகிய இரண்டு எலக்ட்ரிக் கார்களை BYD தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது. மேலும் அடுத்த சில மாதங்களில் Seal மின்சார பேட்டரி காரை வெளியிட உள்ளது.