ஹெக்டர் எஸ்யூவியை தொடர்ந்து எம்ஜி மோட்டாரின் முதல் எலெக்ட்ரிக் காராக ZS EV டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 262 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்க உள்ளது.
ZS EV மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 262 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். இந்த பேட்டரியை 7kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.
இந்நிறுவனத்தின் முதல் ஹெக்டர் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள இணைய சார்ந்த பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்ற எம்ஜி ஐஸ்மார்ட் நுட்பத்தையும் இசட்எஸ் மின்சார காரும் பெற உள்ளது. முதற்கட்டமாக இந்த கார் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைத்திராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் வெளியாகலாம். ஜனவரி முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் படிப்படியாக நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களில் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.