எம்ஜி மோட்டாரின் அடுத்த மாடலாக வெளியிடப்பட உள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான எம்ஜி இசட்எஸ் இ.வி மாடலுக்கான முன்பதிவை துவங்குகின்றது. இந்த மின்சார காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு ஜனவரி மாத இறுதியில் விலை அறிவிக்கப்படலாம்.
44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், அதிகபட்சமாக 340 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 8.5 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காருக்கு இணை விருப்பமாக 7.4 கிலோ வாட் சார்ஜர் வழங்குவதுடன் 15 ஆம்பியர் வீட்டு சார்ஜரலிலும் சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரியை 7 kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.
எம்ஜி ZS EV காரின் விலை ரூ.23 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதம் இந்த காரின் விலை அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் படிங்க – டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி சிறப்புகள்