எம்ஜி மோட்டார் நிறுவனம், தனது கார்கள் மற்றும் எஸ்யூவி விலை ஜனவரி 2024 முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. பல்வேறு ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் ஜனவரி முதல் விலை உயர்வை அறிவித்துள்ளனர்.
எம்ஜி தற்பொழுது தற்போது, வாகன உற்பத்தியாளர் இந்தியாவில் காமெட் EV, ஆஸ்டர், ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், ZS EV மற்றும் குளோஸ்டெர் உள்ளிட்ட ஆறு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
MG Motor Price hike
வாகன உற்பத்தியாளர் விலை திருத்தத்தின் சதவீதத்தை வெளியிடவில்லை. தொடர்ந்து, அதிகரித்து வரும் உற்பத்தி செலவு, ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களை கருத்தில் கொண்டு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக எம்ஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து புதிய வாகனங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.