இந்திய மார்க்கெட்டில் வரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும் என்று எம்ஜி மோட்டார் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தனது எலக்ட்ரிக் வாகனம் ஒன்றை வெளியிட உள்ளது.
இது இந்த நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் வாகனம் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு பின்னர், ஓராண்டு கால இடைவெளியில் வெளியாக உள்ளது என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்திய வாடிக்கையாளர்களுக்காக அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் எலக்ட்ரிக் காரில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய SAIC மோட்டார் & SAIC மோட்டார் சர்வதேச நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் யாங், எம்ஜி நிறுவனம் இந்திய உள்பட உலகளவில் முழுமையான எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, எங்கள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள முழுமையான எலக்ட்ரிக் கார்கள் நிரப்பும். இதுமட்டுமின்றி அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் எலக்ட்ரிக் எஸ்யூவிகளையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்த விரிவாக்கப்பணிகளின் தொடக்கமாக, எம்ஜி நிறுவனம் தனது விற்பனையை 45 டீலர்கள் மூலம் தொடங்க உள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 100 டச்பாயின்ட்களையும் முதற்கட்டமாக உருவாக்க உள்ளது. மேலும் வரும் 2019ம் ஆண்டில் 1,500 தொழிலாளர்களை பணியமர்த்தி தற்போது உள்ள தொழிலாளர்களில் எண்ணிக்கையை மேலும் உயர்த்தி கொள்ள முடிவு செய்ய எம்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது
தற்போது, எம்ஜி கார் தயாரிப்பு நிறுவனம், ஆண்டுக்கு 80 ஆயிரம் கார்களை குஜராத்தில் உள்ள தனது தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வருகிறது. இதை எதிர்கால தேவைக்கேற்ப 2 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
இந்த வாகனங்கள், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளதோடு, உள்நாட்டை சேர்ந்த இன்ஜினியர்கள் மூலம் உலக தரத்தில் உருவாக்கப்படும். என்று எம்ஜி நிறுவன்ம உயர் அதிகாரி ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.