வருகின்ற 2021 ஜனவரி முதல் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய கார் மாடல்களின் விலையை உயர்த்தி வருகின்றன.
குறிப்பாக ஹூண்டாய், மாருதி சுசுகி, கியா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் முன்பே விலை உயர்வை அறிவித்து விட்டன. தற்போது இந்தப் பட்டியலில் எம்ஜி மோட்டார் நிறுவனமும் இணைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் ஹெட்டர் பிளஸ் 7 சீட்டர் மாடல் ஜனவரி மாதம் விற்பனைக்கு வெளியாகின்றது. அடுத்தபடியாக புதிய ஃபேஸ்லிஃப்ட் ஹெக்டர் ஜனவரியின் இறுதியில் விற்பனைக்கு வெளியாகின்றது. எனவே, ஹெக்டர் பிளஸ் 6 இருக்கைகள், எம்ஜி க்ளோஸ்டெர் , இசட்எஸ் இவி ஆகியவறின் விலை மட்டும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.