வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் காமெட் எலக்ட்ரிக் காரில் சிறப்பு கேமர் எடிசன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது.
குறைந்த விலையில் வரவுள்ள இரண்டு கதவுகளை பெற்று 4 இருக்கை கொண்ட காமெட் மின்சார காரினை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிமீ வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
காமெட் EV காரில் சுமார் 17.3 kWh மற்றும் 26.7 kWh திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷன் மூலம் இயக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை குறைப்பதற்காக பேட்டரி உள்நாட்டில் மிகவும் நம்பகமான டாடா AutoComp நிறுவனத்தில் இருந்து பெறப்பட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதால் பேட்டரி பேக் விபரம் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
இருப்பினும், காமெட் இவி கார் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். எனவே ரேஞ்ச் ஆனது 200 கிமீ (17.3kWh) முதல் 300 கிமீ (26.7kWh) வரையிலான ரேஞ்சை கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இளம் வீடியோ கேம் பிரியர்களை இலக்காக கொண்ட ஸ்பெஷல் கேமர் பதிப்பு உட்பட பலவேறு வகைகளில் அறிமுகம் செய்யப்படலாம். இதற்காக இந்திய கேமர் நமன் மாத்தூரின் (MortaL – Naman Mathur) ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள காரின் டீசரை வெளியிட்டுள்ளது.