இந்தியாவில் முதல் காரை அறிமுகம் செய்துள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரினை ரூ.12.18 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்ட 23 நாட்களில் 10,000 க்கு மேற்பட்ட புக்கிங் பெற்றுள்ளது.
பெட்ரோல், 48 வோல்ட் ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என மொத்தமாக மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை கொண்டதாக ஹெக்டர் கார் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த எஸ்யூவி மாடலில் வந்துள்ள ஐ-ஸ்மார்ட் என்ற பெயரில் உள்ள கனெக்ட்டிவிட்டி வசதியின் மூலம் பல்வேறு இணையம் சார்ந்த வசதிகள் உள்ளன.
ஹெக்டர் எஸ்யூவி காரின் விவரம்
143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக ஹைபிரிட் பெட்ரோல் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.
2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.
பிரிவு | ஹெக்டர் பெட்ரோல் | ஹெக்டர் டீசல் |
என்ஜின் | 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் | 2.0 லிட்டர் டர்போ டீசல் |
குதிரைத்திறன் | 143hp | 170hp |
டார்க் | 250Nm | 350Nm |
கியர்பாக்ஸ் | 6-speed MT/6-speed dual-clutch AT | 6-speed MT |
48V mild-hybrid | ஆப்ஷன் | – |
மைலேஜ் | லிட்டருக்கு 14.16 கிமீ/13.96 கிமீ AT | லிட்டருக்கு 17.41 கிமீ |
பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.
எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.
மேலும் முழுமையாக வாசிங்க – எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விவரம்